Wednesday 23 November 2016

ஸ்ரீ கோரக்கர் சித்தர்


ஸ்ரீ பாப்பையா சித்தர் பீடம் முன்பாக, ஆலயத்தின் வலது புற திசையின்கண் தழுதாளை விருட்சம் விளங்குகிறது. இம்மரத்தின்கீழ் ஸ்ரீ கோரக்கர் மகாசித்தர் பெருமான் அமர்ந்து தியானித்ததாக சொல்லப்படுகிறது.  ஸ்ரீ கோரக்கர் மகாசித்தர் அவர்களை நெஞ்சுருக வணங்க நினைக்கும் அன்பர்கள் இவ்விருட்சத்தின்கீழ் தீபம் ஏற்றி வழிபடலாம். அமர்ந்து தியானிக்கலாம்.



ஸ்ரீ கோரக்கர் காயத்ரி மந்திரம்
ஓம் தத்புருஷாய வித்மஹே 
சித்ரூபாய தீமஹி 
தந்நோ குரு கோரக்கர் பிரசோதயாத்



ஸ்ரீ கோரக்கர் மகாசித்தர் பெருமான் மூல மந்திரம்

ஓம் பசு பரபதி பக்ஷ ராஜ 
நிரதிஷய சித்ரூப, ஞான மூர்த்தேய, தீர்க்க நேத்ராய,
கண கண், கம் கங், கெங் லங், லிங் லங், லாலீலம்,
ஆவ், பாங் ஆம், ஊம், பார்கவ்ய, ஜோதிமய
வரபிரசன்ன பாத தெரிஸ்ய,
கோரக்க சரணாய நமஸ்து.

-----------------------------------------------------------------------------------------------------------------

ஓம் சித்தாய நம,
ஓம் மஹா சித்தா கோரட்சநாதாய நம,
ஓம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீ கோரக்க சித்த சாமியே போற்றி! 
(நன்றி: திரு. மூர்த்தி கோரக்கர் அவர்கள்)



* இங்கே குறிப்பிடப்பட வேண்டிய செய்தி யாதெனில், விருத்தாசலத்தின்கண் வாழும், மகான் ஸ்ரீ கோரக்கர் பெருமானின் குருவருளும் திருவருளும் பெற்றுள்ள  எம் குரு திரு.மூர்த்தி கோரக்கர் அவர்களின் தியான நிலையில், நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்காவில், பொறையார் பகுதியில் அருள்புரியும் மகாகுரு ஸ்ரீ பாப்பையா சித்தர் ஜீவசமாதி பற்றிய குறிப்பை  மகான் ஸ்ரீ கோரக்கர் பெருமான் அருளிய படி, கடந்த 08/03/2012  அன்று, திரு.மூர்த்தி கோரக்கர் அவர்கள் இங்கே விஜயம் செய்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment