ஸ்ரீ பாப்பையா சித்தர் பெருமான், மகான் ஸ்ரீ கோரக்கர் சித்தர் பெருமானின் சீடர் என்று போற்றப்படுகிறார். செவிவழி செய்தி ஒன்று, மகான் ஸ்ரீ கோரக்கர் சித்தர் அவர்களும், ஸ்ரீ போகர் சித்தர் பெருமான் அவர்களும், ஸ்ரீ பாப்பையா சித்தர் அவர்கள் ஜீவசமாதி கொண்டுள்ள இத்தலத்தின்கண் தங்கிய காலம், எதிர்வரும் காலத்தில் இஸ்லாம் மதம் சார்ந்த சித்தர் ஒருவர் இவ்விடம் வருவார் என்றும், அவர்தம் திருப்பெயர் பாப்பையா என்றும், அனைத்து மக்களுக்கும் இறையன்பு காட்டுவர் என்றும், ஜீவசமாதியாகும் காலத்தே அவரை இங்கே ஜீவசமாதி செய்வித்தால், அனைவரும் எல்லாம்வல்ல இறையருள் சித்திக்க பெறுவார்கள் என்றும் குறிப்பிட்டதாக சொல்லப்படுகிறது.மேலும், ஸ்ரீ பாப்பையா சித்தர் அவர்கள், முற்பிறவியில் ஸ்ரீ சானாஷ்டா புத்தராக விளங்கியுள்ளனர். மற்றுமொரு பிறவியில்தான் ஸ்ரீ பாப்பையா சித்தராக விளங்கி, இத்தலத்தின்கண் ஜீவசமாதி கொண்டு அருள்பாலித்துவருகின்றார். இத்தகு ஜீவசமாதியைச் சுற்றி வேறு சித்தர் பெருமக்களும் சமாதி கொண்டுள்ளதாக நம்பப்படுகிறது. முறைப்படியான சிவத்தலத்திற்கே உரிய வகையில் கிழக்கு நோக்கிய ஆலயம், ஸ்ரீ கணபதி, ஸ்ரீ நந்தி தேவர், கருவறையில் சிவலிங்கம் என அமையப்பெற்றுள்ளது. இடப்புறமாக கிழக்கு நோக்கியபடி, அம்மா அருள்மிகு பௌத்தபூரணி பவதாரணி சொர்ணமகாகாளி வீற்றிருந்து அருள்பாலித்துவருகின்றார்.
செப்டம்பர் 2017ல் கோபுரதரிசனம் இதழில் வெளிவந்த ஸ்ரீ பாப்பையா சித்தர் சுவாமிகள் பற்றிய குறிப்புகள் அடங்கிய பிரதி இங்கே தரப்பட்டுள்ளது. பக்தர்கள் படித்து பயன்பெறுங்கள்.
செப்டம்பர் 2017ல் கோபுரதரிசனம் இதழில் வெளிவந்த ஸ்ரீ பாப்பையா சித்தர் சுவாமிகள் பற்றிய குறிப்புகள் அடங்கிய பிரதி இங்கே தரப்பட்டுள்ளது. பக்தர்கள் படித்து பயன்பெறுங்கள்.
🙏🏻 குருவே துணை
ReplyDelete